பொடுகு தொல்லையை போக்க டிப்ஸ் டிப்ஸ்!!

முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டாலும், பொடுகு தொல்லை முக்கிய காரணமாக உள்ளது. பொடுகு தொல்லையால், அரிப்பு, எரிச்சல் உள்ளிட்டவை உருவாகும்.

மழைக்காலத்தில் பொடுகு தொல்லை என்பது அதிகமாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு முதல் நாம் பயன்படுத்தும் ரசாயன பொருட்களின் எதிர்வினை என பல்வேறு காரணங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்த பின்னர், 15 நிமிஷம் கழித்து குளிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து குளித்தால் சில நாட்களில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தலை வறட்சி ஏற்பட்டால், வாரம் ஒருமுறை நல்லெண்ணை தேய்த்து 'ஆயில் பாத்' எடுப்பது நல்லது.

பசலை கீரையை அரைத்து தலையில் அரப்பு போல் தேய்த்து குளித்தால் பொடுகை கட்டுப்படுத்தலாம்.

தேங்காய் எண்ணையுடன் வேப்பெண்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறவைத்து தினசரி தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.