தலைச்சுற்றலுக்கும் ரத்த அழுத்ததிற்கும் தொடர்பு உண்டா?

பொதுவாகவே ரத்த அழுத்தம் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் தலைச்சுற்றல் இருக்கும்.

எனவே அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்பட்டால் ரத்த அழுத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

மன அழுத்தம் காரணமாக பலருக்கு ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.

உணவு, குடிநீர் போன்றவற்றை முறையாக எடுத்துக்கொள்ளாததால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும்.

ரத்த அழுத்தத்தால் ஒருவருக்கு இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு இருந்தால் தலைச்சுற்றல் இருக்கும்.

அதனால் அதிக முறை தலை சுற்றல் இருந்தால் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படலாம்.