கைகளை சுருக்கமின்றி பராமரிக்க எளிய வழிகள்!

வெயில், வறட்சியால் கைகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் உண்டாகும். அந்த சுருக்கங்களை நீக்க வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே பராமரிக்கலாம்.

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது. இது சருமப் பிரச்னைக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. இதனை பயன்படுத்தும்போது சரும சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.

அரிசி உடலுக்கு உட்புறம் மட்டுமல்ல, வெளிப்புறத்தில் சருமம், கேசத்துக்கும் சிறந்த பலங்களை தரக்கூடியது.

அரிசி மாவை ரோஸ் வாட்டர் மற்றும் நீரை சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். சுருக்கம் உள்ள பகுதிகளில் தடவி நன்றாகக் காயந்தவுடன் கழுவவும்.

வாழைப்பழத்தை பேஸ்ட் போல செய்து சுருக்கம் உள்ள இடத்தில் தடவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு பிறகு நீரில் கைகளை அலசவும்.

பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும்.