பக்கா உணவு மக்கானா... ஆய்வுகள் கூறுவதென்ன?
சமீபகாலமாக பிரபலமாகி வரும் மக்கானா 3,000 ஆண்டுகளாக ஆயுர்வேத, சீன பாரம்பரிய மருத்துவத்தில் அறியப்பட்ட ஒன்றுதான். தமிழில் இதனை தாமரை விதை என அழைப்பர்.
இது தாமரை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவித அல்லியிலிருந்து பெறப்படுகிறது. ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கூறப்படுகிறது.
மக்கானா, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தைச் சீராக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோளத்தை பாப்கார்னாக சாப்பிடுவது போன்று, இவை பொரித்து விற்கப்படுகின்றன.
இவற்றை வறுத்து, கஞ்சி, சூப் ஆகியவற்றில் சேர்த்துக் குடிக்கலாம். பொடி செய்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகக் கூட பரிமாறலாம். உலககெங்கும் இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மக்கானாவில் லுசின், ஐசோலுாசின், மெத்தியோனைன், சிஸ்டைன், அர்ஜினைன், குளுட்டமைன் உள்ளிட்ட நுண்சத்துகள் உள்ளன.
100 கிராம் மக்கானா விதைகளில் 9.7 கிராம் புரதம், 0.1 கிராம் சர்க்கரை, அத்துடன் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
பல்வேறு பலன்கள் தரக்கூடிய பக்காவான உணவு மக்கானா என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.