நடைபயிற்சி செய்வதால் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகுமா?

மூட்டுத் தேய்மானம், இடுப்புத் தேய்மானம் உள்ளபோது, நடக்கலாமா?' என்று பலருக்கும் பலத்த சந்தேகம் உள்ளது.

நடந்தால் வலிக்கிறது என்று நடக்காமல் இருந்தால், மூட்டுகளிலுள்ள திரவம் மேலும் குறைந்து, பிரச்னை இன்னும் பெரிதாகும்.

நடக்கும் போது தான் மூட்டுகளின் உட்பகுதி துாண்டப்பட்டு, திரவத்தைத் சுரக்கச் செய்யும். நடைபயிற்சி, உடற்பயிற்சிகளை செய்யும் போது தான் தசைகள் வலிமை அடையும்.

சீரான உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்வது மிகவும் முக்கியம்; அதிலும், தினசரி நடைபயிற்சி செய்வது தான் மூட்டுகளுக்கு நல்லது.

இதுவரை நடைபயிற்சியே செய்ததில்லை என்றால், எடுத்த உடனேயே ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என்று நடப்பது நல்லதல்ல.

இது மூட்டுகளில் வலியையே ஏற்படுத்தும். பிரச்னை மேலும் பெரிதாகும். தினமும் நிதானமாக, 15 நிமிடங்கள் நடந்தால் போதும்.

இதை போன்று ஓரிரு மாதங்கள் செய்த பின், சிறிது சிறிதாக நேரத்தையும், துாரத்தையும் அதிகரிக்கலாம். நடக்கும் போது மூட்டுகளின் உட்பகுதி துாண்டப்பட்டு, திரவம் சுரக்கும்.

ஆஸ்ட்டியோ ஆர்த்ரைடீஸ்சை பொருத்தவரை, 90 சதவீதம் பேருக்கு, வலி நிவாரணி, நடைபயிற்சி, பிசியோ தெரபி மூலமே பிரச்னை கட்டுக்குள் வந்து விடும்.