மார்பக கட்டி குறித்து பதட்டம், கவலை தேவையில்லை !

18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை, ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை கட்டாயம்.

எந்த வயதாக இருந்தாலும் மார்பக கட்டி குறித்து பதட்டமோ, கவலையோ தேவையில்லை.

பரிசோதனை மூலம் கண்ணாடியில் பார்த்தும், கட்டியில் கைவைத்து பார்த்தும் அதன் தன்மை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

காலச்சூழ்நிலை, பருவநிலை மாற்றம் இவற்றுடன் பாரம்பரியமாகவும் மார்பக புற்று நோய் ஏற்படலாம்.

கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதாலும் ஏற்படும். மார்பக புற்று நோய்க்கான காரணத்தை முழுமையாக கண்டு கொள்ள முடியவில்லை.

சிறு வயது குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர்ப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படக்கூடும்.

30 வயதை கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் டாக்டரை அணுகி தீர்வு காணலாம்.

கட்டியை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். மார்பக கட்டி ஆப்ரேஷன் செய்து 30 ஆண்டுகளை கடந்தவர்களும் நலமாக உள்ளனர்.

முழு பரிசோதனை செய்த பின்பே புற்றுநோய் குறித்த முடிவுக்கு வர முடியும். மார்பகத்தில் கட்டி, மார்பக காம்பில் ரத்தக் கசிவு, நீர் கசிவு உள்ளிட்ட மாற்றம் இருந்தால் டாக்டரை கட்டாயம் அணுக வேண்டும்.