நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு பாஸ்மதி அரிசி நல்ல சாய்ஸ்!
பழுப்பு பாசுமதி அரிசியில் நார்ச்சத்து, பாஸ்பரஸ், தயமின், துத்தநாகம், வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன.
ஒரு கப் அளவு வேகவைத்த பாசுமதி அரிசியில் 210 கிராம் கலோரிகள், 46 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 7 கிராம் நார்ச்சத்து உள்ளது.
இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. குறிப்பாக 50 முதல் 58 வரை கிளைசெமிக் குறியீட்டுடன் இவ்வரிசி குறைந்த நடுத்தர கிளைசெமிக் கொண்டுள்ளது.
இதில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் பளபளப்பான சருமத்திற்கும் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.
இந்த அரிசியில் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாஸ்மதி அரிசியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்.