யானை உயரத்தை மறைக்கும் அளவிற்கு, 6அடி முதல் 12அடி வரை இந்த பயிர் வளரும் என்பதால், காட்டுயானம் எனப் பெயர் வந்தது.
இந்த காட்டுயானத்தின் சாகுபடி காலம் 6 மாதங்கள் ஆகும். சிவப்பு வகை அரிசி வகைகளில், சற்று தடிமனாக இருக்கும்.
நீரிழிவு கொண்டோர் காட்டுயானம் அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தி, நோயைக் குணப்படுத்தும். டைப்-2 நீரிழிவு கொண்டோருக்குச் சிறந்த உணவாகும்.
காட்டுயானம் அரிசியை தொடர்ந்து உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
இந்த அரிசியில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இதயத்தைப் பலப்படுத்துவதோடு, இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.
இதில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்து மீண்டும் வராமல் தடுக்கிறது.
விந்து உற்பத்தியை அதிகரித்து, உடலைப் பலம்பெறச் செய்யவும் உதவுகிறது.