நெஞ்செரிச்சலை தவிர்க்க உதவும் உணவுகள் சில !
ஆப்பிளில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம்.
ஹிலிகோபாக்டர் பைலோரியா என்னும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. கற்றாழை ஜூஸை குடித்து வர, அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும்.
கடல் உணவுகளில் டாரின் சத்து அதிகமுள்ளது. எனவே இதனை சாப்பிட எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை டாரின் குறைக்கும். கண்களுக்கும் இது சிறந்தது.
இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலை தடுக்கலாம்.
ஆன்டாசிட்கள் உள்ள வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சலுக்கு நல்லது.
பாலில் கால்சியம் அதிகமுள்ளது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், அது எரிச்சலை உண்டாக்கும் அமிலம் அதிகம் சுரப்பதை தடுக்கும்.
அதிமதுரம்... இந்த உணவுப் பொருள் எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் சிறந்தது. இதிலுள்ள நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் தங்குவதையும் தடுக்கும்.
தினமும் போதியளவு தண்ணீரைக் குடித்து வர, எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து வெளியேறிவிடும். மேலும், உடலிலுள்ள செயல்பாடுகள் அனைத்தும் சீராக இயங்கும்.