உணவு தொண்டையில் சிக்கிக்கொண்டால் என்ன முதலுதவி செய்யலாம்?

நாம் சாப்பிடும் உணவு, உள்ளே இறங்கும் போது, உணவு குழாய் சிக்கியோ அல்லது, தவறான பாதையில் நுழைந்துவிட்டால், உள்ளிழுக்க வேண்டிய மூச்சு தடைபட்டு, திணறல் ஏற்படும்.

மூச்சுத்திணறல் முற்றினால், 40 வினாடிகளில் மயக்கம் ஏற்பட்டு, சில சமயத்தில் மரணம் கூட ஏற்படக்கூடும். அதனால் உடனடி மருத்துவ உதவி செய்வது அவசியம். அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.

ஒருவருக்கு சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவருடைய பின்புறம் நின்று, பின்னாலிருந்து இடுப்பைச் சுற்றிக் கட்டிக் அழுத்த வேண்டும்.

மசித்த வாழைப்பழம் அல்லது தயிர் போன்ற மென்மையான உணவை சாப்பிடலாம். . இது சிக்கிய உணவை உள்ளே தள்ள உதவும்.

பொதுவாகவே உணவு தொண்டையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, அவசர அவசரமாக உண்ண வேண்டாம். மேலும் உணவை நன்கு மென்று உண்ண வேண்டும்.

உண்ணும் போது எப்போதும் தண்ணீரை அருகில் வைக்க வேண்டும். தேவைப்படும் போது சிறிதளவு தண்ணீரைக் குடிக்கவும். இதனால் தொண்டையில் சிக்கிய உணவை விழுங்க முடியும்.

சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். மேலும் தாமதப்படுத்துவது பிரச்னையை மோசமாக்கும்.