எலும்பு மெலிவு நோய் எதனால் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது? கால்சியம் குறைபாடா?
கால்சியம் சத்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். கால்சியம் குறைவாக இருந்தால் எலும்பு மெலிவு நோய் (Rickets) என்பது குழந்தைகளில் ஏற்படலாம்.
இரும்பு மற்றும் புரதச் சத்து குறைபாடு, கை, கால் முட்டி தடித்து இருப்பது, கை, கால் வளைந்து இருப்பது, நெஞ்சு எலும்பு முன்னோக்கி துருத்தி இருப்பது, கூன் விழுந்த முதுகு இதன் அறிகுறிகள்.
இப்படிப்பட்ட நோய் பாதிப்புக்கு குழந்தைகளுக்கு முதுகு வலி, தசை பிடிப்பு, பல் அரிப்பு, பசியின்மை மட்டுமில்லாமல் உடையக்கூடிய நகங்கள், முடி, தோல் வறட்சியாக காணப்படும்.
பொதுவாக கால்சியம், வைட்டமின் டி குறைபாட்டால் ரிக்கட்ஸ் வருகிறது என்பதால், வைட்டமின் மாத்திரைகள், இணை உணவுகள் மூலமே சிகிச்சை தரப்படுகிறது.
பாதிப்புகளை தவிர்க்க கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், பிரக்கோலி, முட்டைக்கோஸ், பாதாம், ஆரஞ்சு ஜூஸ், மத்தி மீன், ராகி, சோயா, கீரைகள் போன்ற உணவுகளை உண்ண வேண்டும்.
எலும்பின் உறுதியை பரிசோதித்து தகுந்த சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்டால் அவை உறுதியுடன் நிலைக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.