விளக்கு ஏற்றுவதன் பலன்கள்!

பொதுவாக, வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், மகாலட்சுமி அங்கு வாசம் செய்வாள். தீய சக்திகளும் நம்மை அண்டாது காப்பாள்.

குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் பெண்மைக்குரிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம் மற்றும் பொறுமை ஆகிய ஐந்து நற்பண்புகளைக் குறிக்கும்.

அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்ந்தது தான், விளக்கு. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் இது உணர்த்துகிறது.

ஒருமுகம் ஏற்றினால், மத்திம பலன் கிடைக்கும். இரு முகங்கள் ஏற்றினால், குடும்ப ஒற்றுமை ஓங்கும். மூன்று முகங்கள் ஏற்றினால், புத்திர பாக்கியம் கிட்டும்.

நான்கு முகங்கள் ஏற்றினால், பசு, பூமி உள்ளிட்ட செல்வங்கள் கிடைக்கும். ஐந்து முகங்கள் ஏற்றினால், சகல செல்வங்களும் பெருகும்.

விளக்கில் தாமரைத் தண்டு திரி போட்டு, பசு நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடும்போது, வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும்

அண்ணாமலை தீபம் பார்த்தால், 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும். வேறு எந்த விழா கண்டாலும் பார்ப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலை தீபத்துக்கே இந்த சிறப்பு.