சம்மருக்கு இந்தியாவில் விசிட் செய்ய அழகிய கடற்கரைகள் சில !
கேரளாவின் அழகிய பேக் வார்ட்டர்ஸில் அமைந்திருக்கும் பகுதியில் மராரி கடற்கரை ஒன்றாகும். கூட்டம் எதுவுமின்றி அமைதியான சூழலில் ஓய்வெடுக்க நினைபவர்கள் இங்கு செல்லலாம்.
சூரிய ஒளியில் புதுச்சேரி, செரினிட்டி கடற்கரை மணல் தங்கம் போல் மின்னும். மரங்கள் சுற்றியிருக்க வெள்ளை மணலுடன், கடலை அருகே பார்க்க கற்பாலம் என காண்போரை கவர்கிறது.
கோவாவில் உள்ள பட்டாம்பூச்சி கடற்கரையில் பெயருக்கேற்ப பல வண்ணமயமான, அழகிய பட்டாம்பூச்சிகள் காணப்படுகிறது. தேனிலவு தம்பதிகள் இங்கு அதிகம் வருவதால், 'ஹனிமூன் பீச்' என அழைக்கப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள ஓம் கடற்கரையானது ஹிந்தியிலுள்ள ஆன்மீக ஒலியான ஓம் வடிவத்தை போன்று காட்சியளிப்பது நம்மை பிரமிக்க வைக்கிறது.
ஒடிசா, அஸ்தரங்க கடற்கரையில் பறவைகள் அதிகளவில் காணப்படுவதால், புகைப்பட கலைஞர்கள் இங்கு படை எடுப்பர்.
மேற்கு வங்கம், மந்தர்மணி, கடற்கரையில் படுத்துக் கொண்டே அலைகளின் சப்தத்துக்கு இடையே, மறையும் சூரியனை பார்க்கும் காட்சி, மயக்கும் மாலை பொழுதாக அமையக்கூடும்.
கோவளம் கடற்கரை, முன்பு கோவ்லாங் பீச் என்று அழைக்கப்பட்டது. இது தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ள கோவ்லாங் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
லட்சத்தீவின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றான அகத்தி கடற்கரை ஒருவித மயக்கும் அழகுடன் உள்ளது. இதற்கேற்ப இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.