மன அழுத்தத்தை குறைக்கும் பழங்கள்

தற்போது பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளுள் ஒன்று மன அழுத்தம். இதை சரி செய்ய பல்வேறு வழிகள் உள்ளநிலையில், புதிய ஆய்வுகளும் தொடர்கின்றன.

நம்முடைய குடல் ஆரோக்கியத்திற்கும் மூளைக்கும், மன நிலைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் குடலில் வாழ்கின்ற சில நல்ல நுண்ணுயிர்களால் மன அழுத்தத்தைச் சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை ஆய்வில் சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட குடலிலுள்ள ஒரு வகை (ஃபேசிகலிபாக்டீரியம் ப்ராஸ்நிட்சி} பாக்டீரியா பெருகும் என தெரியவந்துள்ளது.

சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளவை சிட்ரஸ் பழங்களாகும். சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தங்காய் ஆகியவை இந்த வகையில் வரும்.

இந்த பாக்டீரியாவுக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களான செரொடொனின் (serotonin), டோபோமைன் (dopamine) ஆகியவற்றின் உற்பத்திக்கும் தொடர்பு இருக்கிறது.

இவை நமக்கு மன அமைதி, மகிழ்ச்சியை தருகின்றன. எனவே ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை உண்பது மன அழுத்தத்தை 20 % வரை குறைக்குமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.