தொற்று நோய் பரவலா? இணையவழியில் புகார் செய்யலாம்!
கோடைக்காலம் ஆரம்பித்ததும் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, அம்மை ஆங்காங்கே தமிழகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் பரவும் தொற்று நோய், காய்ச்சல் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறைக்கு பொதுமக்களே தகவல் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார இணையதளம் (ஐஹெச்ஐபி), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்ட (ஐடிஎஸ்பி) இணையதளங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
நோய்ப் பரவல் குறித்து பொதுமக்களே நேரடியாகத் தெரிவிக்கும் வகையிலான இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்பிரச்னைகளுக்கு https://ihip.mohfw.gov.in/cbs/#!/ என்ற இணையதளம் வாயிலாக, பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
அதன்படி, இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட பகுதியில், சுகாதாரத் துறையினா் விரைந்து கள ஆய்வு செய்து நோய் பரவலைக் கட்டுப்படுத்துவா்.
இந்த இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.