உலக கோப்பை வரலாற்றில் மெஸ்சி படைத்த 5 புதிய சாதனைகள்
உலகம் முழுக்க உள்ள கால்பந்து ரசிகர்களால் அன்போடு கோட் (GOAT), அதாவது கிரேட்டஸ் ஆப் ஆல் டைம் என அழைக்கப்படுபவர் லியோனல் மெஸ்சி.
கத்தாரில் தனது கனவை நனவாக்கியது மட்டுமல்ல.. பல சாதனைகளையும் படைத்துள்ளார் இவர். கத்தார் உலக கோப்பை சீசனில், மெஸ்சி படைத்த 5 புதிய சாதனைகளை பார்ப்போம்...
ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி, அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெற்றுள்ளார்.
ஃபிபா வரலாற்றில், கோல் அடித்த வயதான வீரர் என்ற சாதனையை மெஸ்சி தற்போது படைத்துள்ளார். முன்னதாக, ஒரு ஆட்டத்தில் கோல் அடித்து உதவிய இளம் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்திருந்தார்.
பிரான்ஸ் அணிக்கு எதிரான பைனலில் 2 கோல்கள் அடித்து அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய மெஸ்சி, அனைத்து சுற்று போட்டிகளிலும் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு, உலக கோப்பை வரலாற்றில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் (23 நிமிடங்கள்) என்ற பெருமையை பெற்றார்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 5 உலக கோப்பை தொடர்களில், மொத்தம் 26 போட்டிகளில் பங்கேற்றுள்ளதால், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையும் இவருக்கே சொந்தம்.
இப்போதைக்கு அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என அறிவித்துள்ளதால் மெஸ்சியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.