பெண்களை பாதிக்கும் மெட்டபாலிக் சிண்ட்ரோம்!

பெண்களின் உடல், மன வளர்ச்சியில் 3 விதமான வளர்சிதை மாற்றங்கள் நடக்கும். 12, 14 வயதில் மாதவிடாய், 20 வயதிற்கு மேல் குழந்தை, 40 வயதிற்கு மேல் மெனோபாஸ் ஆரம்பிக்கும்.

உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், பதப்படுத்திய, சுத்திகரிக்கப்பட்ட வறுத்த, பொரித்த மைதா உணவுகள் தற்போது அதிகம் உண்ணப்படுகிறது.

இதனால், 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்' எனப்படும் உடலின் உள் செயல்பாடுகள் விரைவாக நடந்து, உடல் பருமன் அதிகரிக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள் விரைவிலேயே நடக்கிறது.

இதனால், 12 வயதிற்கு மேல் வர வேண்டிய மாதவிடாய், 10 வயதிலேயே ஆரம்பிக்கிறது. மனதளவில் இதை எதிர்கொள்ள தயாராகாத நிலையில், மன அழுத்தம் ஏற்படுகிறது.

தொடர்ந்து டீன் ஏஜ்ஜில், பிசிஓடி எனப்படும் நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், வெள்ளை படுதல், குறைவான ரத்தப் போக்கு, சிலருக்கு அதிகம் என்று பல பிரச்னைகள் வருகிறது.

திருமணத்திற்கு பின் குழந்தையின்மை, உடல் பருமன், தைராய்டு கோளாறுகள், 35 வயதிலேயே மெனோபாஸ் அல்லது கர்ப்பப்பை பெரிதாவது, கட்டுப்பாடில்லாத ரத்தப் போக்கும் ஏற்படுகிறது.

குழந்தைப் பருவத்தில் இருந்தே யோகா பயிற்சி செய்யும் போது, உடல், மன வலிமை, சீரான மூட்டுக்கள் இயக்கம், வளர்சிதை மாற்றம், மன அழுத்தம், பதட்டம் குறையும்.

ஜங் உணவுகளை தவிர்த்து பழம், காய்கறிகள், விதைகள் தினசரி உணவில் இடம் பெற வேண்டும். தினமும் மூன்று - நான்கு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.