அடிக்கடி கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்
காலையில் உட்கொள்ளக்கூடிய என்ர்ஜி டிரிங்க்கள் புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இதில், இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் கேரட் ஜூஸ் பல்வேறு
ஊட்டச்சத்துக்களின் சக்தியாக உள்ளது. இவை உடலுக்கு அளிக்கும் ஆரோக்கிய
நன்மைகள் இதோ...
கேரட்டில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதிலுள்ள வைட்டமின் ஏ, கண்களின் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.
கேரட் உடன் இஞ்சி ஜூஸ் கலப்பதால் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின் உடலிலுள்ள தேவையற்ற
கொழுப்புகளை கரைக்க உதவுகிறது; குடல் புண் வராமல் தவிர்க்கிறது. கல்லீரல்
ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
கலோரி குறைவாக உள்ளதால் தினமும் குடித்து வர, தொப்பை கொழுப்பை குறைக்கலாம் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாகும்.