கோடையில் ஆண்களையும் பாதிக்கும் முகப்பருக்கள்! தடுக்க சில டிப்ஸ்!

வெயில் காலத்தில் ஆண்கள் அதிகம் வெளியே செல்லும் போது, சருமம் வறண்டு பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்துவதோடு, அதிகளவில் முகப்பருக்களை உண்டாக்கும்.

இதை தடுக்கவும், சருமத்தை ஈரப்பத்துடன் வைத்துக்கொள்ள சிறந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியேறும் முன் குறைந்தது 30 நிமிடங்களுக்கு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

இது தோல் சேதம், சன் டேன் (Sun Tan), கரும்புள்ளிகளை மட்டுமில்லாமல் சரும முதிர்ச்சிக்கான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்கும்.

சர்க்கரை மற்றும் தேனுடன் சிறிதளவு காபி தூள் சேர்த்து, முகத்தில் தடவி கழுவினால், இறந்த செல்கள் நீங்கி முகம் மிருதுவாக மாறும்.

கோடை காலம் முழுவதும் குறைந்தது 3 - 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். இது உங்களை நீரேற்றமாக வைக்கும்.

உங்கள் முகப்பருவை ஒருபோதும் கிள்ளவோ அல்லது அழுத்தவோ வேண்டாம். இது வடு ஏற்பட வழிவகுக்கும்.