வெயில் காலத்தில் கூந்தலுக்கு வரும் மூன்று பிரச்னைகள்…
வெயில் காலத்தில், சிலருக்கு தலையில் அரிப்பெடுக்கும். அப்பிரச்னை உடையவர்கள், எண்ணெயை சிறிது சூடாக்கி, தலைக்கு, மசாஜ் செய்யவும்.
பின், சிறிது வேப்பிலையுடன், மூன்று சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து, தலையில் ஊற வைத்து, 10 நிமிடங்கள் கழித்து, தலைக்கு குளித்தால், அரிப்பு நிற்பதுடன், முடி மென்மையாக இருக்கும்.
கோடையில், 'அல்ட்ரா வயலட்' அதிகமாக வெளிபடுவதன் காரணமாக, கூந்தல் நன்கு வளரும். அதேசமயம், வெயிலின் பாதிப்பால், முடியின் நுனி வெடிக்கும்.
இதனால், முடி வளர்ச்சி தடைபடும். இதைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சூடுபடுத்தி, தலையில் பூசி மசாஜ் செய்ய வேண்டும்.
அதிக வியர்வையால் பொடுகு தொல்லை ஏற்படும். அதற்கு, வாரம் மூன்று முறை, ஆயில் மசாஜ் செய்து, தலைக்கு குளிக்க வேண்டும்.
விளக்கெண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் கலந்து, சூடு செய்து, மசாஜ் செய்யலாம்.