ஹீட் ஸ்ட்ரோக்கை தவிர்க்க என்ன செய்யலாம்?

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உடலுக்கு தேவையான நீர்சத்து இல்லாத நேரத்தில் மயக்கம் ஏற்படுகிறது. இதை தான் ஹீட் ஸ்ட்ரோக்' என்ற வெப்ப வாதம் என கூறுகிறோம்.

இதை தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

கோடைக்காலத்தில் கீரை, வெள்ளரி, புதினா போன்றவற்றை தினமும் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ள பழங்களை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அவை தாகத்தைத் தணிக்கவும் உடலுக்கு குளிர்ச்சியாகவும் செயல்படுகின்றன.

இறைச்சி, வறுத்த உணவுகள், ஆல்கஹால் மற்றும் காபி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் நீரேற்றமாக இருக்கலாம்.

அதிக வெப்பம் இருக்கும் வேலைகளான 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

லேசான பருத்தி மற்றும் தளர்வாக பொருத்தப்பட்ட ஆடைகள் கோடையில் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன.