லேப்டாப், மொபைல் போனால் அதிகரிக்கிறதா மலட்டு தன்மை?

குழந்தையின்மை என்றாலே பொதுவாக, பெண்களை குறைகூறிக்கொண்டு இருக்கும் வீடுகள் இன்றும் பல உள்ளன.

ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் ஆண்கள் மத்தியில் மலட்டுத்தன்மை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிலும், 25 முதல் 35 வயதினரின் விந்தணுக்களின் தரம், மிகவும் குறைவாக உள்ளதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.

பல காரணங்கள் இருந்தாலும், பொதுவாக மொபைல், லேப்டாப் பயன்பாடும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மற்றொரு முக்கிய காரணம், ஆண்கள் மத்தியில் காணப்படும் உடல்பருமன், உணவு முறை மற்றும் புகைப்பிடித்தல், ஆல்கஹால் பயன்பாடு.

பொதுவாக விந்தணு, கருமுட்டை இரண்டும் வயதின் காரணமாக தரம் குறையும். பெண்கள் 30 வயதுக்குள்ளும், ஆண்கள் 35 வயதுக்குள்ளும் குழந்தை பெற்றுக்கொள்வது சிறந்தது.

இன்றைய தொழில்நுட்ப உலகில், மொபைல், லேப்டாப் பயன்படுத்தவில்லை என்றாலும் அனைவருக்கும், கதிர்வீச்சு தாக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

முடிந்தவரை இதன் பயன்பாட்டை குறைப்பது நல்லது. புகைப்பிடித்தல், ஆல்கஹால் பழக்கங்களை விடவேண்டும். தினமும் உடற்பயிற்சி மிகவும் அவசியம்.