அடிக்கடி ஃபிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்
உருளைக்கிழங்கில் தயாரிக்கப்படும் சிப்ஸ், வறுவல், பஜ்ஜி பலருக்கு பிடித்தமானது. குறிப்பாக ஃபிரென்ச் ஃப்ரைஸ் பலருக்கும் பேவரீட் எனலாம்.
ஆனால், இதை அதிகளவில் சாப்பிடுவது உடல் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஃபிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவது பதட்டத்தையும், மனச்சோர்வையும் அதிகரிக்கக்கூடும். இதிலுள்ள அக்ரிலமைடு (acrylamide) என்ற சேர்மம் இதற்கு காரணமாகும்.
பொதுவாக உருளைக்கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அதிகப்படியான வெப்பத்தில் டீப் ஃப்ரை செய்யும் பொழுது இந்த நச்சுப்பொருள் உருவாகிறது.
குறிப்பாக உருளைக்கிழங்கில் அதிகப்படியான மாவுச்சத்து இருப்பதால் அக்ரிலமைடு அதிகமாக உருவாகிறது.
பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இதுபோன்ற உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்தி பதட்டம், மன சோர்வு போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.
இந்த உணவுகளை எண்ணெயில் பொரிக்கும் போது, அதிலுள்ள நீர்ச்சத்து குறைந்து எண்ணெயில் உள்ள கொழுப்பை உறிஞ்சிக் கொள்ளும்.
இந்த உணவை நாம் சாப்பிடும் பொழுது கலோரி அளவு அதிகரிப்பதால், உடல் பருமன், இதயம் சார்ந்த நோய்கள், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
மேலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மாவுச்சத்து மற்றும் கொழுப்பு உள்ள இது போன்ற பொறித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.