பனீரை மிருதுவாக்க பயன்படுத்தும் ரசாயனத்தால் புற்றுநோய் அபாயம்
கர்நாடகாவில், பல்வேறு உணவுப் பொருட்களின் தரம் குறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்கின்றனர்.
அதன்படி, சமீபத்தில் நடந்த ஆய்வில், பனீரில் 'பாக்டீரியாக்கள்' இருப்பதும், அவற்றை மிருதுவாக்க ரசாயனங்கள் கலக்கப்படுவதும் கண்டறியப்பட்டது.
ரசாயனம் கலப்பதால், பனீரில் இயல்பாக இருக்கக்கூடிய, 'கால்சியம் மற்றும் புரதம் குறைகிறது.
இதை உட்கொள்ளும்போது சிறுநீரக பிரச்னைகள், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என உணவுப்பாதுகாப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சரியான முறையில் தயாரிக்கப்படும் பனீரில் லேசான வாசனை இருக்கும். எனவே, வாங்கும் பொழுது பனீரில் வாசனை வருகிறதா என்பதை சோதித்து பாருங்கள்.
சிறிய துண்டை எடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்தால் எண்ணெய் பசை ஆகும். இது போலியான பனீரில் ஆகாது; கைகளில் தேய்க்கும்போது உதிரியாக உடையக்கூடும்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு துண்டு பனீரை போடுங்கள். அது கரையத் துவங்கினாலோ அல்லது வெள்ளை நுரை வந்தாலோ போலியானது என அர்த்தம்.
உண்மையான பனீர் தண்ணீரில் கரையாது மற்றும் நுரை வராமல் மிதக்கும்.