கோடைக்கால வெப்ப நோய்கள் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க !
அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு டைபாய்டு, வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை மற்றும் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, விடுமுறையில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது
பெற்றோர்கள் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும். கொதிக்க வைத்த
தண்ணீரை பயன்படுத்துவது அவசியம்.
சாலையோர உணவுகளை
உட்கொள்ளும்போது வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி
போன்ற அறிகுறிகளுடன் புட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளதால், முடிந்தளவு
தவிர்க்க வேண்டும்.
போதியளவு தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம். இது சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை என சிறுநீர் அமைப்பின் எந்தப் பகுதியிலும் தொற்று உண்டாக்கும்.
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பை தவிர்க்க கடும் வெப்பம் இருக்கும் போது குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதை தவிர்க்கவும்.
ஜங்க்
ஃபுட் மற்றும் சர்க்கரை கலந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், சிறு
குழந்தைகளுக்கு அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.