கல்பாசியின் ஆரோக்கிய நன்மைகள் இவை

மசாலாப் பொருட்களில் ஒன்றான கல்பாசி உணவின் சுவையை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

செரிமான நொதிகளைத் தூண்டி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, வாய்வு மற்றும் வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது.

மூட்டு வலி, தசை வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் தருகிறது.

இதிலுள்ள ஆன்டிலித்தியாடிக் பண்புகள் சிறுநீர்ப்பாதை தொற்று மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.

ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சரும நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து பளபளப்பை அளிக்கிறது.

இதிலுள்ள வேதிப்பொருட்கள் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வயிற்றுப் புண்களுக்குக் காரணமான 'ஹெலிகோபாக்டர் பைலோரி'யின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளது.

உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம், இதயம் தொடர்பான பாதிப்பை குறைக்கிறது.

அதேவேளையில், ஹைப்பர் சென்சிடிவ் பிரச்சனை, சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு அழற்சி மற்றும் அரிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.