கோடை சூட்டை தணிக்கும் வெட்டி வேர்
நன்றாக சுத்தப்படுத்தி பொடித்த வெட்டிவேர்த் தூளுடன் பெருஞ்சீரகத் தூளை சம அளவு கலந்து, ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் காலையில் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற கோடைகால நோய்கள் குணமாகும்.
மண்பானை தண்ணீரில் வெட்டிவேரை போட்டு வைத்து, அந்த தண்ணீரை பருகி வர தாகம் தணிந்து, உடல் சோர்வு நீங்கி உற்சாகம் வரும்.
இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இரும்பு, மாங்கனீசு, பி6 வைட்டமின் உள்ளிட்ட சத்துக்கள் வெட்டிவேரில் உள்ளதால், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தக்கூடும்.
தேங்காய் எண்ணெயுடன் வெட்டிவேரை சேர்த்து நன்றாக காய்ச்சி, வலியுள்ள இடங்களில் தடவி வர கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.