கரு சிதைவிற்கும், மூட்டு வாதத்திற்கும் சம்பந்தம் உள்ளதா?

ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் என்ற மூட்டு முடக்குவாதம், நம் உடல் அணுக்களை, நம் நோய் எதிர்ப்பு செல்கள் அழிக்கும் ஆட்டோ இம்யூன் குறைபாடு.

அதாவது, சுய எதிர்ப்பு நோய். இது, 20 - 40 வயது வரை உள்ள பெண்களையே அதிகம் தாக்குகிறது.

இளம் வயதில் இப்பிரச்னை இருந்தால், குழந்தை பெற திட்டமிடும் போதே டாக்டரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.

முடக்குவாத பாதிப்பிற்கான சில மருந்துகள் சாப்பிட்டால் கருத்தரிக்க முடியாது.

கருவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைப்பர்.

நோயின் தீவிரம் குறைவாக இருப்பதை கணித்து, அந்த நேரத்தில் குழந்தை பெற திட்டமிட வேண்டும்.

கர்ப்பம் தரித்து, குழந்தை பெற்று, தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரையிலும், எந்தெந்த மருந்துகளை தவிர்க்க வேண்டும் என்பதற்கு, டாக்டரின் ஆலோசனை அவசியம்.