ஆளி விதையின் அற்புத பயன்களை அறிவோமா!!
ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், பிரவுன் நிறத்தில் இருக்கும். அந்த விதையின் அளவு சிறிது ஆனால், பயன்கள் அதிகம். அது குறித்து அறிந்துக்கொள்வோம்
இந்த விதையில் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, கனிம சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.
இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போல செயல்பட்டு புற்று நோய் தாக்கத்தை எதிர்த்து போராடும்.
இவற்றில் காணப்படும் லிக்னன்கள், உடலினுள் கெமிக்கல்களால் மாற்றப்பட்டு உடலில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும்.
மேலும் பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோ போரோசிஸ், இருதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும்.
இதன் கரையாத நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது துாவி சாப்பிடலாம். மோரில் கலந்து தினமும் பருகலாம்.