கோடையில் மோரை மிஸ் பண்ணாதீங்க…
தினமும் மோர் அருந்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோடையில் ஏற்படும் பல்வேறு தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
மோரில் வைட்டமின் பி உள்ளது. இதனால், உண்ட உணவு எளிதில் செரிமானம் ஆகும். அல்சருக்கு மிகவும் நல்லது.
100 மில்லி மோரில், சுமார், 116 மி.கி., கால்ஷியம் உள்ளது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்லது.
ஒரு டம்ளர் மோரில், கொஞ்சம் கருப்பு மிளகு தட்டிப் போட்டு, கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்செரிச்சல் குணமடையும்.
மோரில் பீட்ரூட் துருவல் மற்றும் சீரகப் பொடி சேர்த்து குடிப்பதால், செரிமானம் பலப்படும். வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு, மோர் கலந்த உணவுகளை கொடுப்பதால், அவர்களின் நோய் கட்டுப்படும்.
கெட்டி தயிரில் நிறைய தண்ணீர் கலந்து, கொஞ்சம் உப்பு, தேவையான அளவு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும், நீர் மோர், நம் உடம்பில் நீர் சமநிலையை பராமரிக்கிறது.