கோடை காலத்தில் வரும் கண் வறட்சி நீங்க... டிப்ஸ் டிப்ஸ்...

கோடைகாலத்தில் கண்கள் வறட்சி அடைவது, கண் எரிச்சல் மற்றும் கண்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

வைட்டமின் சி, பயனுள்ள, ஆன்டி-ஆக்சிடண்ட். இது, நம் கண்களை புத்துணர்ச்சியாக்கும், மேலும், புற ஊதாக் கதிர்களில் இருந்தும் காப்பாற்றுகிறது.

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவதால், கண் புரை எனும், 'காட்ராக்ட்' குறைபாடுகளை, 84 சதவீதம் தடுக்கலாம்.

ஆரஞ்சு, கேரட் போன்ற ஆரஞ்சு நிற உணவுகளில், பீட்டா கரோட்டின் அதிகமுள்ளது. இந்த சத்தை எடுத்துக் கொள்ளும் போது, அது வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

தினமும் ஒரு கேரட், ஒரு சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தர்பூசணி சாப்பிட, எளிதில் வைட்டமின் ஏ கிடைக்கும்.

கண் திரவ அழுத்தத்தை தணிக்க மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற பொருள் பயன்படுவதாக கண்டறிந்துள்ளனர், விஞ்ஞானிகள்.

வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு என, இவற்றில் ஏதாவது ஒரு காய்கறியை வெட்டி துண்டுகளாக்கி, கண்களின் மீது வைக்கலாம்