கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

கர்ப்பத்திற்கு முன்பு பிடித்தவை மீது கர்ப்பகாலத்தின் போது நாட்டம் இல்லாமல் இருத்தல், எதிர்மறை எண்ணங்கள் தோன்றுதல் ஆகியவை கர்ப்பகால மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்.

இதை தவிர்க்க முதலில் 8 மணி நேரம் நன்றாக துாங்க வேண்டும்.

கணவன் உற்ற உறுதுணையாக மனைவிக்கு இருக்க வேண்டும்.

மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவை பதட்டம், படபடப்பு, மனக்குழப்பத்தை பெரிதும் குறைக்கும்.

கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் எண்ணங்கள், உணர்வுகளை கணவன், பெற்றோர், தோழிகளுடன் பரிமாறுதல் வேண்டும்.

புரதச்சத்து நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்து கொண்டு முடிந்தவரை இனிப்புகள், அதிக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

சில குறிப்பிட்ட யோகாவை கர்ப்பகாலத்தில் செய்து வந்தால் மன அழுத்தத்தை முடிந்தவரை தவிர்க்க முடியும்.