பல் சொத்தையை எவ்வாறு சரி செய்வது?

பல் சொத்தை என்பது பல்லில் ஏற்படும் ஒரு சிறிய துளையாகும். நாளடைவில் இது பெரியதாகவும் ஆழமாகவும் மாறும்.

இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்.

சாக்லேட், இனிப்பு பலகாரங்கள், ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளில் சர்க்கரை அதிக அளவு காணப்படும். இவற்றை சாப்பிடும் போது துகள் பல் இடுக்கில் ஒட்டிக்கொள்ளும்.

வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா இவற்றுடன் செயல்பட்டு அமிலத்தைச் சுரக்கச் செய்துவிடும். இந்த அமிலமே பற்களின் வெளிப்பூச்சான எனாமலை அழிக்கத் தொடங்கும்.

இதன் அடுத்தக்கட்ட நிலையாகப் பற்கள் சொத்தையாகி விடும். பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால். அது அதிகமாகி மற்ற பற்களிலும் பரவிவிடும்.

நாளைடைவில் இது ஆழமாகி பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

பல்லை பழைய நிலைக்கு கொண்டுவர பல் சொத்தை நீக்கி பல் அடைத்தல் அல்லது வேர் சிகிச்சை செய்ய வேண்டும்.

கடுமையான சிதைவு இருக்கும் நிகழ்வுகளில் பல் மருத்துவர் பல்லை அகற்றிவிடக்கூடும்.

நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம் இந்த பல் சொத்தையை கட்டுப்படுத்தலாம்.