சருமத்தை பாதிக்கும் தேமல்! போக்க சில டிப்ஸ்!
சருமத்தில் அலர்ஜியால் வரும் ஒரு பாதிப்பு என்றால் அது தேமல். அவை சருமத்தின் இயல்பான நிறத்தை மங்க செய்து, ஆங்காங்கே வெள்ளை திட்டுகளாக இருக்கும்.
இவை மலேசேசியாஃபர்ஃபர் (Malassezia Furfur) எனும் கிருமியால் உண்டாகிறது. வியர்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் வரும்.
தேமல் பாதிப்பு இருப்பவர்களின் சோப்பு, டவல் போன்றவற்றை பயன்படுத்துவதினால் கூட தேமல் வரும்.
தினமும் இரு வேளை கடலை மாவு அல்லது பச்சை பயறு மாவு கொண்டு குளிக்க வேண்டும்.
சோப்பு வேண்டும் என நினைப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் கெமிக்கல் குறைவான சோப்பை பயன்படுத்த வேண்டும்.
துளசி இலைகளை பேஸ்ட் போல் அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
வேப்பிலைகளை ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்னை குறையும்.
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், தேமல் மறையும்.
மஞ்சள் தூளை தயிரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, கழுவலாம்.