நீரிழிவு பாதிப்புக்கான காரணங்கள் என்ன?
கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைவாக இருந்தாலோ,
இரைப்பையில் குறைபாடு இருந்தாலோ நீரிழிவு பாதிப்பு ஏற்படும். ரத்தத்தில்
சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
குழந்தை பருவத்தில் வரும்
நீரிழிவு பாதிப்பை டைப் 1 என்றும், பரம்பரை மற்றும் மரபணு, வாழ்க்கை முறை
காரணமாக ஏற்படுவதை டைப் 2 என்றும் கூறுவர்.
இந்தியாவில் 10
கோடி மக்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில்
13 கோடி மக்கள் துவக்க நிலை பாதிப்பில் உள்ளனர்.
பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தானாக எடை குறையும்; அடிக்கடி சிறுநீர் போகும்.
அதீத தாகம், உடல் சோர்வு, பார்வை மங்குதல், காயங்கள் ஆற அதிக நாட்கள் ஆவது உள்ளிட்டவை பாதிப்புக்கான அறிகுறிகள்.
நீரிழிவு நோயாளிகள் கசப்பு மற்றும் துவர்ப்பு நிறைந்த காய்கறிகளை எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்.
வாழைக்காய்,
சுரைக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், கொத்தவரங்காய் தொடர்ந்து
சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.