வசம்பு... ஆரோக்கிய நன்மைகள் இதோ !

இருமல், நரம்புத்தளர்ச்சி, வாய் நாற்றம், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது வசம்பு.

இதை சுட்டுத் துாளாக்கி, சுக்குத் துாளுடன் கலந்து வயிற்றில் தடவினால், உப்புசம் குறையும்.

சுட்டுத் துாளாக்கிய வசம்பை, தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்க, பசி ஏற்படும்; நன்கு பால் குடிப்பர்.

குழந்தைகளை குளிப்பாட்டியதும், வசம்பைச் சுட்டு உரைத்து, கால்களின் அடிப்பாகத்திலும், தொப்புளைச் சுற்றிலும் பூசி வர, எந்த நோய்களும் அண்டாது.

வசம்பு, மஞ்சள் ஆகியவற்றை தலா ஒரு துண்டு சேர்த்து அரைத்து, பொன்னுக்கு வீங்கி எனும் கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்க நோய்க்கு பற்றுப்போட, விரைவில் குணமாகும்.

வசம்பு, அதிமதுரம் சேர்த்து, நீரை காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், இருமல், காய்ச்சல், சளி அனைத்தும் நீங்கும்.

இதை அம்மியில் வைத்து துாள் செய்து, சிறிதளவு தேனில் குழைத்து அதிகாலையில் தினமும் சாப்பிட்டு வந்தால், திக்குவாய் நிவாரணம் கிடைக்கும்.