கர்ப்ப கால நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்த சில தீர்வுகள்....

கர்ப்ப காலத்தில் ரத்த சர்க்கரை அளவை கவனமாகக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

கர்ப்பம் முழுவதும் சர்க்கரை அளவைச் சீராக வைப்பதன் மூலம் குழந்தையின் எடை அளவுக்கு அதிகமாகாமல் தடுக்கலாம்.

மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

மகப்பேறு டாக்டர், நீரிழிவு சிறப்பு டாக்டருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது கர்ப்பிணியின் ஆரோக்கியத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் கண்காணிக்க உதவும்.

சீரான உடற்பயிற்சி, மிதமான நடைப்பயிற்சி, டாக்டர் பரிந்துரைக்கும் பயிற்சிகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் உதவும்.

கர்ப்ப காலம் முழுவதும் சரியான உணவுப் பழக்கம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்தின்போதும் அதற்குப் பின்னரும் கர்ப்பிணிகள் ரத்த சர்க்கரை அளவை மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

பிரசவத்தின்போது ஏற்படும் மன அழுத்தம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். அதிலும் கவனம் அவசியம்.