ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆப்களை அன் இன்ஸ்டால் செய்தால் போதும்
நம் சுற்றுச்சூழல், மரபுகளுக்கு எதிரான மேற்கத்திய உணவுகள், வாழ்க்கை முறைகளை பின்பற்றினால், நோய்களுக்கு வாய்ப்புள்ளது.
உடல் நலக் கோளாறுகள் வரும்போது, எதிர்ப்பு சக்தியின்றி,
உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், நோய்
எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது தான் ஒரே வழி.
எனவே, முதலில் மொபைல் போனிலுள்ள அனைத்து உணவு டெலிவரி ஆப்களையும் 'அன் இன்ஸ்டால்' செய்து விட வேண்டும்.
அடுத்தது, நம் வாழ்க்கை முறைகளை மேம்படுத்த வழி சொல்லும் பாரம்பரிய முறைகளை முடிந்தளவு பின்பற்றலாம்.
வருமுன் காப்பது எப்படி என்பதை பற்றி தான் பாரம்பரிய மருத்துவ முறைகளை பேசுகிறது.
இதில், சாப்பிட வேண்டிய உணவு, அளவுகள் எப்படி, எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், தினசரி ஒழுங்கு முறைகளை எப்படி பின்பற்றலாம் என தெளிவாக அறியலாம்.
நம் பழைய சாதமும், புளிக்க வைத்த மாவும் சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை பெருகச் செய்வதாக ஆய்வுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
அதிக வெள்ளை சர்க்கரை பயன்பாடு இதய நோய்கள், கேன்சர், பித்தப்பை கல்,
கல்லீரல் பேட்டி லிவர், அல்சைமர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுப்பதால்,
முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.