அடிக்கடி உண்டாகும் மூச்சுத் திணறலுக்கு காரணமும்.. தீர்வும்... ! .
பொதுவாக மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மூச்சுத் திணறல் ஏற்படும்.
துாசி,
புகை, பூக்களின் மகரந்தம், ஒவ்வாமை, கோடை காலத்தில் காற்றில் ஈரப்பதம்
இல்லாததாலும் காற்று மாசு அதிகரித்து அதனை சுவாசிக்கும் போது
மூச்சுத்திணறல் ஏற்படும் .
இது போன்ற நேரங்களில் புகைகளில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும்.
மூச்சுத் திணறல் ஏற்படும் போது நுரையீரல் சிறப்பு டாக்டரிடம் ஆலோசித்து உரிய சிகிச்சை எடுகக் வேண்டும்.
சரியாக
கவனிக்காவிட்டால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும்
மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவார்கள். பரம்பரையாக பாதிக்கப்படவர்களுக்கும்
ஆஸ்துமா வரும்.
மூச்சுத் திணறல் காரணமாக இதய பாதிப்பும் ஏற்படும்.
வைரஸ் காய்ச்சலால், சிறு குழந்தைகளுக்கு குளிர் பானங்கள், ஐஸ் போன்றவைகளை உட்கொள்வதால் இந்த பாதிப்பு ஏற்படும்.
இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புரதச்சத்து நிறைந்த உணவுகளான முட்டை, சுண்டல், பயறு வகைகளை உண்ணலாம்.