பாக்டீரியா உருவாக்கும் குடல் புற்றுநோய்

சர்வதேச புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி, 2008 - 2017 வரை பிறந்த கிட்டத்தட்ட 1.56 கோடி பேர், எதிர்காலத்தில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படலாம்.

இதில், 76 % பாதிப்புகளுக்கு அறிகுறியற்ற எச்.பைலோரி (H. Pylori) என்ற பாக்டீரியா தொற்றே காரணமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது வயிற்றில் தங்கி, நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும். நாளடைவில் அல்சர் எனப்படும் குடற்புண்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இந்த பாதிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, ஆசியாவிலேயே இருக்கும் என இந்த ஆய்வு கணித்துள்ளது.

இந்த பாக்டீரியாவை குடலிலிருந்து நீக்க எளிய ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்துவிட்டன.

எனவே, எச்.பைலோரியை இலக்காகக் கொண்டு, உலகளவில் 'பரிசோதித்து சிகிச்சை அளிக்கும்' (Screen -and -treat) திட்டங்களை மேற்கொள்ளலாம்.

இதன் வாயிலாக, புதிய வயிற்றுப் புற்றுநோய் பாதிப்புகளை 75 % வரை குறைக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.