பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்தால் பதட்டப்படாமல் உடனடியாக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.

கடித்த இடத்தில் கயிற்றைக் கொண்டு கட்டக்கூடாது. அவ்வாறு கட்டுவதால் அந்த உறுப்பை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

பிளேடு, கத்தியால் வெட்டி இரத்தத்தை எடுப்பதும், வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சுவதும் தவறான வழிமுறை.கடித்த இடத்தை ஆட்டாமல், அசைக்காமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

பதட்டப்பட்டால் ரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் வேகமாக பரவும். விஷப்பாம்பு கடித்தால் டாக்டரின் அறிவுரைக்கு ஏற்ப 'ஆன்டி ஸ்நேக் வெனம்' (விஷ முறிவு மருந்து) கொடுக்கப்படும்.

நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் பாம்புகளில் எது கடித்தாலும் மருத்துவமனைகளில் ஒரே விஷ முறிவு மருந்துதான் தரப்படுகிறது. இதை 'பாலிவெனம்' என அழைக்கின்றனர்.

எந்த மருத்துவமனையில் 'ஆன்டி வெனம்' மருந்து இருக்கிறது என தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இந்த மருந்து கட்டாயம் இருக்கும்.

பாம்புகளை கண்டவுடன் அடிப்பதற்கு முற்படுகிறார்கள். அதை தவிர்க்க வேண்டும். வனத்துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.