குழந்தைகளை கவரும் ஆரோக்கியமான ராகி லட்டு! ரெசிபி இதோ!
செய்முறை: ராகி லட்டு செய்வதற்கு முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் துாளாக்கி வைத்த வெல்லத்தை கொட்டி பாகு பதத்தில் காய்ச்சி எடுக்க வேண்டும்.
பிறகு இந்த வெல்லப் பாகை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு சிறிய கடாயில் கருப்பு எள்ளை கொட்டி லேசான தீயில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும்.
இதை தொடர்ந்து அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பு உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கேழ்வரகு மாவையும் அதே கடாயில் வறுத்து எடுக்க வேண்டும். இந்த கேழ்வரகு வாசனை வரும் வரை நன்றாக வறுத்து எடுக்கவும்.
இதை அடுத்து நாம் வறுத்த கேழ்வரகு மாவுடன் வெல்லப்பாகு, உலர் திராட்சை, கருப்பு எள், முந்திரி பருப்பு, ஏலக்காய் துாள், சுக்கு துாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.
இப்போது சூடு ஆறியதும் இதை சிறுய லட்டாக பிடித்து வைத்தால் போதும் சுவையான ராகி லட்டு தயார்.
இந்த ராகி லட்டுக்களை ப்ரிட்ஜில் வைத்து இரண்டு வாரம் வரை சாப்பிட்டு வரலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ராகி லட்டுவை தாராளமாக சாப்பிடலாம்.