வெற்றி வாகை சூட இதோ சில டிரிக்ஸ்
எந்த ஒரு செயலையும் உறுதியாக செய்து முடித்தால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்.
எதை, எப்படி செய்யலாம்? அதன் பாதிப்புகள் என்ன? என ஒரு முறைக்கு பலமுறை நிதானமாக யோசித்து செயலில் இறங்க வேண்டும்.
இலக்கை நோக்கி தாமதமின்றி உடனடியாகவும், அதேவேளையில் தெளிவாகவும் செயல்பட வேண்டும்.
ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக கையிலுள்ள எல்லா பணத்தையும் முதலீடு செய்யாமல், குறிப்பிட்டளவு கையிருப்பை சேமிப்பாக வைக்க வேண்டும்.
மனதில் உறுதி இல்லாவிட்டால் எந்த ஒரு முயற்சியிலும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
யாரையும் உதாசீனப்படுத்தாமல், அன்புடன் தட்டிக்கொடுத்து நட்புறவுடன் இருப்பது அவசியமானது.
முடியும் என்ற நம்பிக்கையுடன் எந்த செயலிலும் தீவிரமாக முயற்சித்தால், வெற்றி இலக்கை கட்டாயமாக எட்டலாம்.