நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்கள் மதமதப்புடன் வலி உள்ளதா?... தீர்வுகள் சில

நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களின் பாதங்களில் உணர்வு இல்லாமல் இருத்தல், இரவு நேரங்களில் அதிகமாக கால்வலி இருந்தால் டாக்டரை சந்திப்பது நல்லது.

கால்களில் சிறு புண்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் கால் விரல்களை அகற்றும் நிலை ஏற்படும்.

கால்களில் ரத்த ஓட்டம் குறித்து ஸ்கேன் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆரம்ப நிலையில் மருத்துவமனைக்கு சென்றால் மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்ய முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். பாதிப்பு முற்றினால் கால்களை கூட இழக்க நேரிடும்.

நீரிழிபு பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

தினமும் இரவு துாங்க போகும் போது கால்களை சுத்தம் செய்து கண்ணாடி மூலம் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கார்போ ஹைட்ரேட் சத்துக்களை குறைத்து புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிறு தானியங்களை சேர்த்துக்கொள்ளலாம்.