மொச்சையின் 6 ஆரோக்கிய நன்மைகள்

தினமும், உணவுக்கு முன், கொஞ்சம் மொச்சைக் கொட்டைகளை சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்துக்கு தீர்வு கிடைக்குமென ஆய்வுகள் கூறுகின்றன.

மொச்சை இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்து வைத்து, தினமும் உணவுக்கு முன் சிறிது உண்டு வர, நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.

இதிலுள்ள நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது; குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இதன் பண்புகள் பெருங்குடல் அழற்சியை தவிர்க்கிறது; புற்றுநோய் பாதிப்பை குறைக்க உதவுகிறது.

இதிலுள்ள கரையாத நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கிறது.

இரும்புச்சத்தின் ஆதாரமாக உள்ளதால், சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை, உடலின் ஆற்றல் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.