சருமத்தை அழகாக பராமரிக்க அசத்தலான நாலு ஸ்டெப்ஸ் இதோ...!

சருமத்தை பாதுகாத்தல், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்தல் உட்பட பல்வேறுத் தேவைகளுக்காக பேஸ் கிரீமை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில ஸ்டெப்ஸ்...

பேஸ் க்ரீமை எந்த நேரத்தில் தடவினாலும் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதனால், சருமத்தில் படிந்துள்ள வியர்வை, அழுக்கு, மேக்கப் போன்றவற்றை எளிதாக அகற்ற முடியும்.

ஈரமான சருமத்தில் எப்போதும் பேஸ் கிரீம்களை தடவவும். உங்களின் சருமம் முற்றிலும் வறண்டு போகும் வரை காத்திருந்தால், அது சரிவர வேலை செய்யாது.

முகத்தில் கிரீமை அதிகமாகப் பயன்படுத்தும் போது சிறப்பான நன்மைகள் எதுவும் கிடைக்காது. குறைந்தளவில் பயன்படுத்தும் போது தான், உங்களின் முகத்தில் கிரீமை தேய்க்க நீண்ட நேரம் எடுக்கக்கூடும்.

உங்கள் முகம் முழுவதும் ஆங்காங்கே சிறிய புள்ளிகளாக கிரீமைத் தடவி, பின்னர் அதை மென்மையாக்குங்கள். இந்த வழியில் உங்கள் முகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கிரீம் தடவலாம்.