ஒன்பது மணி நேரம் தூங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

துாங்க ஆரம்பித்த முதல் 90 நிமிடங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வோம். அதன்பின் சில மைக்ரோ வினாடிகள், அதாவது, 1 வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் விழிப்பு வரும்.

அந்த நேரத்தில் ஆழ்ந்த சுவாசம், திரும்பி படுப்பது போன்ற செயல்கள் நடப்பது வழக்கம்.

இதற்கு பின், அடுத்த 10 - 20 நிமிடங்கள் மிதமான உறக்கம், அதன் பின், சில மைக்ரோ வினாடிகள் மீண்டும் விழிப்பு வரும்.

அடுத்த 60 நிமிடங்கள் ஆழ்ந்த உறக்கம் இருக்கும். ஆழ்ந்த உறக்கம், விழிப்பு, மிதமான உறக்கம் என்ற இந்த சுழற்சியாக இருக்கும்.

துாக்கத்தின் ஆரம்பத்தில் ஆழ்ந்த உறக்கம் அதிக நேரமும், காலையில் விழிப்பதற்கு முன் மிதமான உறக்கம் நீண்ட நேரமும் இருக்கும்.

அதிகாலையில் வரும் கனவுகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதற்கு, அந்த நேரத்தில் நாம் மிதமான உறக்கத்தில் இருப்பது தான் காரணம்.

தினமும் இரவில் உறங்கும் போது, ஆழ்ந்த துாக்கம், விழிப்பு, மிதமான துாக்க சுழற்சி ஏழு முறை இயல்பாக நடக்க வேண்டும்.

இதற்கு ஒன்பது மணி நேர துாக்கம் அவசியம். இது உடல் புத்துணர்ச்சி அடையவும், மன அழுத்தம் குறையவும், கவனம் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கவும் உதவும்

மேலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க செய்யும்.