துாக்கத்தில் உடலில் என்ன நடக்கும்?
மத்திய நரம்பு மண்டலத்தில் கிளிம்பேடிக் - என்ற அமைப்பு இருக்கிறது.
இது தினசரி நடந்த நிகழ்வுகளில், நினைவில் பதிய வைக்க வேண்டியவை, அழிக்க வேண்டிய நினைவுகளை பிரிப்பது, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவது போன்றவற்றை செய்கிறது.
உறக்க சுழற்சியில் ஆறு முறை ஆழ்ந்த துாக்கம் இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் ஏற்படும் ரெம் எனப்படும், கண்களின் அசைவு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு நாளில் ஆறு மணி நேரம் மட்டுமே துாங்கினால், இந்த சுழற்சியில் ஒன்றிரண்டு குறையும்.
இதனால், செரிமானம் தொடர்பான பிரச்னை முதலில் ஆரம்பிக்கும். போதுமான அளவு நச்சுகள் வெளியேறாமல் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
துாக்கமின்மையால் ஏற்படும் குறிப்பிட்ட சில கோளாறுகளை குணப்படுத்த முடியாது. தொடர்ந்து நச்சுகள் உடலில் சேர்ந்து, தேவையற்ற புரதங்கள் மூளையில் படிந்து விடும்.
இது பின்னாளில் மறதி நோய் -டிமென்ஷியா, அல்சைமர் ஏற்பட வாய்ப்பாக அமையும். அதனால், துாக்கம் மிகவும் அவசியம்.
பொதுவாக, 60 வயதிற்கு மேல் வரும் இப்பிரச்னை தற்போது 45 வயதிலேயே வருகிறது.
உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இது, மூளை நரம்பு செல்களிடையே புதிய தொடர்பை ஏற்படுத்த உதவும்.
தினசரி ஒழுங்கு முறையை என்னால் கடைப்பிடிக்க முடியாது. வார இறுதியில் சேர்த்து துாங்குகிறேன் என்றால் பலன் தராது.
காரணம், இது உயிரி கடிகார சுழற்சியையும், ஹார்மோன் செயல்பாட்டையும் பாதிக்கும்.
தற்போது சராசரி துாக்க நேரம் ஆறு மணி நேரம் என்றாகி விட்டது. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் துாக்கம் தொடர்பான நோய் பரவல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.