வாயுத்தொல்லையை தவிர்க்க இதோ டிப்ஸ்
வாயுத்தொல்லைக்கு முக்கிய காரணம் நேரத்துக்கு சாப்பிடாதது தான். குறிப்பாக காலை உணவை தவிர்த்தால் பாதிப்பு அதிகரிக்கும்.
அதுபோல் குடலில் கெட்ட பாக்டீரியா அதிகமாக இருந்தாலும் வாயுத் தொல்லையை அதிகரித்து, மலச்சிக்கலை உண்டாக்கும்.
குறிப்பாக 6 மாதத்திற்கு ஒரு முறை குடல் புழுக்களை வெளியேற்றும் மாத்திரைகளை சாப்பிட வேண்டும். ஒன்றரை வயது குழந்தைகள் முதல் அனைவரும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
பூரி, புரோட்டா போன்ற செரிமானத்திற்கு கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
முடிந்தளவு டீ, காபி குடிக்கக்கூடாது.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொண்டால் வாயுத் தொல்லையிலிருந்து தீர்வு காணலாம்.