தந்தைக்கு இதய நோய் இருந்தால், மகனுக்கும் பாதிப்பு வருமா?

ஹார்ட் அட்டாக் ஒருவருக்கு எப்போது ஏற்படும் என உறுதியாக கூற முடியாது. மன உளைச்சல், படபடப்பு, பயம் கொள்ளுதல், கோபம் உள்ளிட்டவை பாதிப்புக்கு காரணங்களாகும்.

இதில் மன இறுக்கம் பிரதான காரணமாகும். படபடப்பு, இடது கை வலி, இடது மார்பு வலி, தலைசுற்றல் வந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி என உறுதியாக கூற முடியாது.

இதுபோன்ற அறிகுறி இருந்தால், பதட்டமடையாமல் இதய நோய் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

நீரிழிவு, ரத்த கொதிப்பு, அதிக கொழுப்பு, புகைப்பழக்கம், மது ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்திருந்தால் இதய நோயிலிருந்து தப்பலாம்.

பரம்பரையில் பெற்றோர்களுக்கோ, உடன்பிறந்தவர்களுக்கோ இதய நோய் இருந்தால், உங்கள் பிள்ளைக்கும் இதய நோய் வருமா என்பது இன்னமும் உறுதி செய்யவில்லை.

ஆனால் கவனமாக இருக்க வேண்டும். எக்கோ, இசிஜி, ஆஞ்சியோ, சிடி கொரோனரி பரிசோதனைகள் செய்து பாதிப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பாதிப்புகளை தவிர்க்க உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, பழங்கள், காய்கறிகள், கீரைகள் அதிகமாக எடுக்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்த மற்றும் இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.